இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது – 7.56% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 7.39 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 7.56 சதவீத வளர்ச்சியாகும்.


இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது – 7.56% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. 

இலங்கைச் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் எரிபொருள் தயாரிப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.56 சதவீத வளர்ச்சியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 5,758.44 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதுடன், இது 7.63 சதவீத வளர்ச்சியாகும். 

சேவைகள் ஏற்றுமதித் துறையும் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், 1,634.95 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. 

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 7.31 சதவீத உயர்வாகும் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2026 மே மாதத்தில் மட்டும் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 18.25 சதவீதத்தாலும், சேவைகள் ஏற்றுமதி 18.67 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Biz21.
Biz21-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க