அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் ரூ. 340 ஆக அதிகரிப்பு
இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (24) மீண்டும் மதிப்புக் குறைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 340.06 ரூபாயாக உயர்ந்துள்ளது, அதே நேரம் கொள்முதல் விகிதம் 330.35 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இன்றைய விற்பனை விகிதம் 339.49 ரூபாயாக இருந்த நிலையில், அது இப்போது 340.06 ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, கொள்முதல் விகிதமும் 329.65 ரூபாயிலிருந்து 330.35 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கை ரூபாய் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக சிறிது உயர்ந்துள்ள நிலையில், வளைகுடா நாணயங்களுக்கு எதிராக சிறிது மதிப்புக் குறைந்துள்ளது.